வெறும் 30 நாளில் தொப்பையை குறைக்க இத மட்டும் சாப்பிடுங்க போதும்!
பொதுவாகவே பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி... அனைவரும் எதிர்க்கொள்ளும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு.
இதற்கு பலரும் பல விதமான முயற்சிகளை எடுத்த வண்ணமே உள்ளனர். உடற்பருமம் அதிகரித்து விட்டால் உடல் ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படும்.
இந்த பிரச்சனைகளில் இருந்து விடுப்படுவதற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் சரிசமமாக கிடைக்க வேண்டும்.
உடற் பருமன் பிரச்சினையை எதிர்க்கொள்பவர்களுள் அதிகமானோர் தொப்பையால் தான் பாதிக்கின்றனர். பல இயற்கையான எளிய முறைகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அது பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வேகமாக எடை குறைக்கும் காய்கறிகள்
1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு வேர் காய்கறி என்றால் சர்க்கரைவள்ளிக்கிழங்கை கூறமுடியும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த கிழங்கானது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இது வயிறை லேசாக உணர வைக்கும் ஆகவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு சிறந்த தேர்வாகும்.
2. பீட்ரூட்
நச்சுத்தன்மையை நீக்க உதவும் ஊட்டச்சத்துக்களின் ஆற்றலை கொண்டிருகிறது. கல்லீரலில் உள்ள நச்சுகளை இயற்கையான முறையில் நீக்கி உடல் எடையை குறைக்கவும் உதவும்.
3. முள்ளங்கி
முள்ளங்கியில் அதிக நீர் உள்ளது. இது உடலை எப்போது நீரேற்றத்துடன் வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். மற்றும் உடல் கலோரிகளை எரித்து எடையை குறைக்கும்.
4. கேரட்
வைட்டமின்கள் மற்றும் பீட்டா கரோட்டின் அதிகளில் இருக்கும் காய்கறி என்றால் அது கேரட். கேரட்டை உட்கொள்வது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது உடலில் நார்ச்சத்து இருப்பதை அதிகரிக்கும். மற்றும் எடையை குறைக்க சிறந்த தேர்வாகும்.
5. நூல்கோல்
இந்த காய்கறியில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன் நார்ச்சத்தானது அதிகமாக இருக்கும். இது பசியை கட்டுப்படுத்தி வைத்திருக்கும். மேலும் ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கும். ஆகவே உடல் எடையானது சீக்கிரமாக குறைந்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |