தொப்பைக்கு முடிவு கட்டும் வஜ்ரா ட்விஸ்ட்- வெண்டைக்காய் நுனியை இனி இப்படி யூஸ் பண்ணுங்க
முறையற்ற வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் தொப்பை பிரச்சினை அதிகமாகி வருகிறது.
உணவு முறையை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் பொழுது உடலில் நோய்கள் வருவது குறைவாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் ஒரு சில பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
தொப்பை பிரச்சினையுள்ளவர்கள் காலையில் எழுந்தவுடன் வெந்தயம் கலந்த தண்ணீர் குடிக்கலாம். அதே போன்று தொப்பையால் அவஸ்தைப்படுபவர்கள் “வஜ்ரா ட்விஸ்ட்” போன்ற எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். இது வயிற்றில் உள்ள கொழுப்புக்களை இலகுவாக கரைக்கும்.
நிபுணரின் கூற்றின்படி, பழங்கால உடற்பயிற்சி முறை - வஜ்ரா ட்விஸ்ட் பெரிய தொப்பைக்கு முடிவு கட்டும். ஒவ்வொரு முறையும் 30 முறை செய்வது அவசியம்..” என கூறியுள்ளார்.
எப்படி செய்வது?
- முதுகை நேராக வைத்து முட்டி போட்டு, மெதுவாக பின்னோக்கி சாய்ந்து கொள்ளவும்.
- அதன் பின்னர், வலது கையை இடது குதிகாலிலும், இடது கையை வலது குதிகாலிலும் அல்லது ஒவ்வொரு காலின் நடுவிலும் வைக்கவும்.
- இப்படி தினமும் செய்வதால் தொப்பை பிரச்சினை முடிவுக்கு வரும்.
பலன்கள்
1. சீரற்ற உணவு, மன அழுத்தம் மற்றும் உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்பு கரையும். அதே போன்று , கலோரிகளை எரித்து மையப்பகுதியை வலுப்படுத்தும்.
2. வயிற்றை டோன் செய்யவும் தட்டையாக வைத்துக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது. வயிற்றில் உள்ள தசைகள் வலுவடையும்.
3. தசைகளை வலுப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்தும். உறுப்புகளுக்கு மசாஜ் செய்து, நச்சுத்தன்மையை நீக்கி, ஊட்டமளிக்கிறது.
என்னதான் நவீனமயமாக்கல் வளர்ந்து வந்தாலும் இந்தியர்கள் பெரும்பாலும் காலையில் இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவுகளை தான் சாப்பிடுகிறார்கள். இப்படி சாப்பிடும் பொழுது அவை சாப்பிடுவதற்கு மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்க வேண்டும் என ஒரு சில டிப்ஸ்களை கையாள்வார்கள்.
தோசை கல்லில் ஊற்றும் பொழுது ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து, தோசையை மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் மாற்றும் ஆற்றல் வெண்டைக்காய்க்கு உள்ளது.
எப்படிப் பயன்படுத்துவது?
முதலில் உங்கள் தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தவும். அதில், வெண்டைக்காய் நுனியைக் கொண்டு சூடான தோசைக்கல்லின் மேற்பரப்பு முழுவதும் மெதுவாகத் தேய்க்கவும்.
வழுவழுப்பான திரவம் கல்லில் பரவிய பின்னர், ஒரு துணியால் கல்லைத் துடைத்துவிட்டு, வழக்கம் போல் தோசை ஊற்றவும்.
இப்படி செய்த பின்னர், தோசை ஊற்றினால் ஒட்டாமல், மொறுமொறுப்பாக வருவதுடன், பொன்னிறமாகவும் இருக்கும். இதனால் வீட்டிலுள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
முடிந்தவரை ஆரோக்கியமான உணவுப்பழக்கங்களை கையாள்வது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |