நாய்கள் குறுக்கிட்டாலும் சகுனம் உண்டாகுமா?
எமது முன்னோர்கள் நாம் வாழ்வதற்கு பல நன்மையான விஷயங்களை தந்துள்ளார்கள்.
எமது வாழ்கையோடு நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் ஒவ்வொரு உண்மைகளை கூறுகின்றன.
அந்த வகையில் நாம் வெளியில் செல்லும் போது நாய்கள் குறுக்கிட்டால் அதற்கு சில பலன்கள் உண்டு, நாய்களின் செயற்பாடுகள் அடிப்படையில் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சகுன சாஸ்திரத்தின்படி ஓரளவு வளந்த நாய்கள் தான் சாஸ்திரத்திற்கு பலன் தரும்.
நாம் பார்க்கும்நாயின் வயது மூன்று வயதைக் கடந்து இருந்திருந்தால் மட்டுமே, சகுன சாஸ்திரம் பலன்கள் கிடைக்கும் .
நீங்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று விதி இருக்கும்போது உங்களை எதிர்பார்காமல் நாய் கடித்துவிட்டால், அந்தச் சிக்கல் உங்களை விட்டு விலகும். நாய்க்கடிக்கு வைத்தியம் பார்க்க வேண்டும்.
நீங்கள் ஒரு காரியத்தில் வெற்றியாகவேண்டும் என நினைத்துச் செல்லும்போது, நாய் 7 முறை குரைத்தால் அந்த காரியம் வெற்றிபெறும்.7 முறைக்கு குறைவாக குரைத்தால் தோல்வியுறும் என்றும் சகுன சாஸ்திரம் கூறுகிறது.இதன் போது நாய் கட்டப்பட்டு இருக்க கூடாது.
நாய் நம்மை பின் தொடர்ந்து வால் ஆட்டினால் நாம் எடுக்கும் காரியம் நன்மையில் முடியும்.
ஒரு குழப்பமான மனநிலையில் இருக்கும்போது நாம் எண்ணிய காரியம் நாயின் படத்தை எங்காவது பார்த்தால் கட்டாயம் வெற்றி பெறும்.
தொலைக்காட்சி, அலைபேசி, புத்தகம் என எந்தவொரு சாதனங்கள் மூலமாவது, நீங்கள் நாயினைப் பார்த்தாலும் உங்களுக்கு வெற்றிகிடைக்கும்.
நீங்கள் பெண்பார்க்கச் செல்லும்போது, கூட்டமாக நாய்கள் குரைக்காமல் விளையாடிக்கொண்டு இருந்தால் பெண் அமைந்துவிடும். நீங்கள் கடனை வசூலிக்க செல்கையில் இருநாய்கள் காதல் கொண்டிருந்தால், வாராதக்கடன்கூட வந்துவிடும் .
நாய் தன் குட்டியுடன் எதிரில் வருகிறது என்றால், நீங்கள் வெகுநாட்களாக வாங்க நினைத்த பொருட்களை கட்டாயம் வாங்கிவிடுவீர்கள்.
வீட்டில் விரும்பி வளர்க்கும் நாய் நன்றாக இருந்தால், உங்கள் வீடு எப்போதும் வறுமையில் இருக்காது.
நாய் அடிக்கடி நம் வீட்டு உத்திரத்தைப் பார்த்தாலோ, சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ, வித்தியாசமாக குரைத்தாலோ யாருக்காவதோ நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல், நீங்கள் வளர்த்த நாய் உங்கள் பேச்சைக் கேட்க மறுத்தால், உங்களுக்கு சோதனைமிக்க காலம் வரப்போகிறது.
நீங்கள் வளர்த்த நாய், உங்களை விட்டுச் எங்காவது சென்றுவிட்டால் கடனாளி ஆகப்போகிறீர்கள் என்று பொருள் என சகுன சாஸ்திரம் கூறுகிறது.