கோடை வெயிலில் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது?
கோடை வெயில் காலங்களில் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
குழந்தைகளை எப்படி பாதுகாப்பது?
குழந்தைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுப்பதுடன், இளநீர், மோர், எலுமிச்சை பானம் போன்ற நீர்ச்சத்து பானங்களை கொடுக்க வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் கடுமையாக இருப்பதால், குழந்தைகளை இந்த நேரங்களில் வெளியில் அழைத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. மேலும் அவ்வாறு செல்ல வேண்டும் என்றால், தொப்பி, சன்ஸ்கிரீன், சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கும் கண்ணாடி, பருத்தி உடைகளை அணிந்து அழைத்துச் செல்லவும்.
பழங்கள், காய்கறிகள், சூப்கள், தயிர் போன்ற சத்தான உணவுகளையும், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை கொடுப்பதுடன், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்கவும்.
குழந்தைகளுக்கு வெப்ப நோய்கள், சூரிய ஒளியின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தாகம், தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வெயிலில் விளையாடுவதை தவிர்த்து, வீட்டிற்குள் புத்தகம் படித்தல், ஓவியம் வரைதல், கதை கேட்பது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |