சுவைாயன வெஜிடபுள் கட்லட் இப்படி செய்து கொடுங்க..
அசைவ பிரியர்கள் பெரும்பாலும் காய்கறிகளை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் கோதுமை மாவு மற்றும் காய்கறிகளை வைத்து சுவையான கட்லெட் செய்து அசத்தலாம்.
இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 3 டீஸ்பூன் + பொரிக்க தேவையான அளவு
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
கேரட் - 2 (துருவியது)
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
உப்பு - சுவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
கோதுமை மாவு - 1 கப்

செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அது நன்கு சூடானதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை நன்கு வதக்கிய பின் சிறிது இஞ்சி பூண்டு விழுது அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் தக்களாி சேர்த்து வதக்கவும்.
பின் அதில் நாம் துருவி வைத்த கேரட்டை சேர்த்து வதக்கவும். பின் அதில் நாம் வேக வைத்த உருளைக் கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் மசாலா பொருள்களான மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து அதன் வாசனை போகும் வரை வதக்கவும். இவை எல்லாம் நன்கு வதக்ககிய பின் இதில் தேவையான அளவு கோதுமை மாவு சேர்த்து பிரட்டி விடவும்.

இவை அனைத்தையும் போதுமான அளவு ஆற விட்ட பின் அதை நன்கு பிசைந்து விட வேண்டும். கையில் சிறிது எண்ணெய் சேர்தது அதை கட்லெட் பதத்திற்கு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் ஒரு கடாயில் சேர்த்து இரு புறமும் நன்கு வேக வைத்து இறக்கினால் சுவையான கோதுமை மாவு வெஜிடபுள் கடட்லட் ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |