வெங்கடேஷ் பட் ஸ்டைல் சோயா மிளகு குருமா....எப்படி செய்யனும் தெரியுமா?
Soya Milagu Kurma Recipe பொதுவாக இரவு டின்னர் என்றாலே நாம் அனைவரும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று தான் சாப்பிடுவோம். அதுவும் சப்பாத்திக்கு என்ன சைடிஷ் வைக்கலாம் என்று யோசிப்போம்.
அந்த வகையில் சப்பாத்திக்கு சைடிஷாக செய்வது தான் இந்த சோயா கீமா. இதன் சுவை மிகவும் அசத்தலாக இருக்கும். அது மட்டுமின்றி இதனை மிகவும் சுலபமாக தயாரிக்கவும் செய்யலாம்
குழந்தைகள், பெரியோர் என அனைவரும் எப்போதும் சாப்பிடுவதை விட இந்த முறை அதிகமாக விரும்பி சாப்பிடும் சோயா கீமா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2
பட்டை - 4 துண்டு
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 1/2டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
முந்திரி - 15-20 (வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்தது)
ஊற வைப்பதற்கு...
சோயா/மீல் மேக்கர் - 500 கிராம்
உப்பு - சிறிது
மிளகுத் தூள் - சிறிது
ஏலக்காய் தூள் - சிறிது
எலுமிச்சை - 1
தயிர் - 400 மிலி
தாளிப்பதற்கு
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
அரைத்த விழுது
தண்ணீர் - தேவையான அளவு
ஊற வைத்த சோயா
சுவைக்கேற்ப உப்பு
பிரஷ் க்ரீம் - 200 கிராம்
கொத்தமல்லி - சிறிது
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் நாம் முந்திரியை சுடுதண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் சோயாவையும் ஊற வைக்க வேண்டும். 2 நிமிடத்திற்கு பிறகு அதை எடுத்து தண்ணீர் இ்ல்லாமல் நன்கு பிழிந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய்் சேர்த்து அது சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை, மல்லி, சோம்பு, மிளகு சேர்த்து வதக்கவும்.
பின் இதில் நறுக்கி வைத்த இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நாம் ஊற வைத்த முந்திரியையும் சேர்த்து நன்கு வறுத்து அதை ஆற வைத்து விட வேண்டும்.

பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் உப்பு மிளகு தூள் ஏலக்காய் தூள் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் மற்றும் தயிர் சேர்த்து நன்கு பிரட்டி அதை ஊற வைக்க வேண்டும்.
பின்பு நாம் வறுத்த பொருட்களை ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கெளா்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது நன்கு சூடானதும் நாம் அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இவை நன்கு கொதித்த பின்பு நாம் ஊற வைத்த சோயாவை சேர்த்து கிளறிவிட்டு உப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்த பின்பு அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால் சுவைாயன சோயா மிளகு குருமா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |