சுவையான நெய் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க..சும்மா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.
சுவையான மங்களூர் ஸ்டைல் நெய் சிக்கன் சுக்கா எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
சிக்கன் சுக்கா
இன்று சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். அசைவ பிரியர்களின் பிடித்த உணவாக சிக்கன் இருக்கின்றது.
வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் அசைவ விருந்தை தான் பெரும்பாலான நபர்கள் வழங்குகின்றனர். அந்த வகையில் சிக்கனில் குழம்பு, சிக்கன் 65, சிக்கன் சுக்கா போன்றவற்றை சாப்பிட்டிருப்பீர்கள்.
ஆனால் இதைவிட சிறந்த முறையில் மங்களூர் ஸ்டைல் நெய் சுக்கா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
1 கிலோ சிக்கன்
4 ஸ்பூன் நெய்
1 கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
5-6 பூண்டுப் பல்
தேவையான அளவு உப்பு
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் புளிக்கரைசல்
எண்ணெய் இல்லாமல் வறுக்க:
1 ஸ்பூன் சீரகம்
ஒன்றரை கப் புதிய தேங்காய் (துருவியது)
10 பூண்டு பல்
நெய்யில் வறுப்பதற்கு:
2 ஸ்பூன் நெய்
3 ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
1 ஸ்பூன் கசகசா
¼ ஸ்பூன் வெந்தய விதைகள்
1 இன்ச் இலவங்கப்பட்டை
1 ஸ்பூன் கருப்பு மிளகு
4 கிராம்பு
20 காஷ்மீரி சிவப்பு மிளகாய்
10 குண்டூர் சிவப்பு மிளகாய்
தாளிக்க:
2 ஸ்பூன் நெய்
¼ கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்

செய்முறை:
முதலில் ஒரு வாணலியில் சீரகம், துருவிய தேங்காய், 10 பல் பூண்டு சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். பின் அதை ஆற வைக்கவும்.
மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து மேலே நெய்யில் வறுக்க வேண்டிய பொருட்களை சேர்த்து வதக்கவும். அதன் பின்பு அதை ஆற வைக்கவும்.
பின்பு நாம் நெய்யில் வறுத்த பொருள்களை ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

பின்பு அதில் கழுவி வைத்த சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நாம் நெய்யில் வறுத்ததை மசாலாவாக அரைத்து அதோடு சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
இப்போது நாம் எண்ணெய் இல்லாமல் வறுத்த பொருள்கைளை அரைத்து பொடியாக்கி சேர்க்கவும். பின் அத்துடன் புளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மீண்டும் ஒரு கடாயில் நெய் சேர்த்து அதுடன் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் நாம் அதை சிக்கனுடன் சேர்த்தால் சுவைாயன மங்களூர் ஸ்டைல் நெய் சிக்கன் சுக்கா ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |