வீட்டுல காய்கறி இல்லைனு யோசிக்கிறீங்களா? கொங்கு ஸ்பெஷல் அப்பளக் கூட்டு செய்யலாம்
Kongu Special Appala Koottu: வீட்டில் அதிகமான காய்கறிகள் இல்லாமல் இருக்கும் போது சுவையான அப்பள கூட்டு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சமையல் செய்ய வேண்டும் என்றால் காய்கறிகள் கட்டாயம் இருக்க வேண்டும். காய்கறிகள் இல்லையென்றால் சமையல் செய்வதற்கே விருப்பம் இல்லாமல் இருக்கும்.
Mushroom Egg Omelette: வீட்டுல முட்டையும், காளானும் இருக்குதா? இந்த மாதிரி ஆம்லெட் செய்து சாப்பிடுங்க
அத்தகைய தருணத்தில் வீட்டில் உருளைக்கிழங்கு மற்றும் அப்பளம் மட்டும் இருந்தால் போதும் சுவையான கூட்டு வைத்து அசத்தலாம்.
எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார், ரசம் என்று வைத்து சாப்பிடும் நிலையில் சற்று வித்தியாசமாக கொங்கு ஸ்பெஷல் அப்பள கூட்டு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
8 அப்பளம்
அப்பளம் பொரிக்க தேவையான எண்ணெய்
1/3 கப் பாசிப்பருப்பு
1 பெரிய வெங்காயம், நறுக்கியது
1 தக்காளி, நறுக்கியது
1 உருளைக்கிழங்கு, தோல் நீக்கி பொடியாக நறுக்கியது
1 பச்சை மிளகாய், கீறியது
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன் மல்லித்தூள்
1/4 ஸ்பூன் மிளகாய் தூள்

தாளிக்க
1 ஸ்பூன் எண்ணெய்
1/4 ஸ்பூன் சீரகம்
1 கொத்து கறிவேப்பிலை
1 பச்சை மிளகாய், நறுக்கியது
செய்முறை
பாசிப்பருப்பை நன்றாக கழுவி, அடிகனமான ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
இதனுடன் தோல் நீக்கி நறுக்கிய உருளைக்கிழங்கு ஒன்றினை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தினை மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.
இதற்கிடையில் அப்பளத்தினை பொரித்து எடுத்து, சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளவும். பருப்பு வெந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

பின்பு அப்பளத்தை பருப்பில் சேர்த்து கிளறிவிடவும். பருப்பு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு சுடு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து பருப்பில் கொட்ட வேண்டும். பின்பு இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் கொங்கு ஸ்டைல் அப்பள கூட்டு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |