கேரளா ஸ்டைலில் காரசாரமான மீன் குழம்பு எப்படி செய்றது?
Kerala Style Fish Kuzhambu: கேரளாவின் பாரம்பரிய உணவான மீன் குழம்பு காரசாரமாக எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம.
பொதுவாக கேரளத்து உணவு என்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கின்றது. அதிலும் அங்கு செய்யப்படும் மீன்குழம்பு என்றால் தனி சுவை தான்.
இங்குள்ள மீன் குழம்பானது தேங்காய் எண்ணெய், பிரஷ்ஷான மீன் கொண்டு சமைக்கப்படுவதால் சுவை அதிகமாகவே இருக்கின்றது.
அந்த வகையில் மண்சட்டியில் மணமணக்கும் கேரளா ஸ்டைல் மீன் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
மீன் - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
குடம்புளி - 2 துண்டு

செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து வைக்கவும். இஞ்சி, பூண்டு இவற்றினை இடித்து வைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், இடித்து இஞ்சி, பூண்டு இவற்றினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் அதில் துண்டு துண்டாக சின்ன வெங்காயம் நறுக்கி சேர்த்து விட்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை இரண்டு சேர்த்து பச்சை மனம் போகும் வரை வதக்கவும்.

இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் இவற்றினை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
கொதித்த பின்பு நறுக்கிய மீன் துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து கடைசியாக குடம்புளி மற்றும் சிறிதளது தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கினால் அருமையான மீன் குழம்பு தயார்.
மீனை மசாலா தடவி பொரித்து பின்பு குழம்பில் போட்டாலும் சுவை தாறுமாறாகவே இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |