ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு இப்படி செய்து சாப்பிடுங்க... சுவை அட்டகாசமா இருக்கும்.
சுவையான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வெந்தயம்
நமது வீட்டு சமையலறையில் இடம்பெறும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று தான் வெந்தயம். எந்த குழம்பு வகைகளாக இருந்தாலும் அதில் வெந்தயத்தின் பங்கு இருந்தே தீரும்.
பெரும்பாலான நபர்களுக்கு இதை சமையலுக்கு ஏன் சேர்க்கின்றோம் என்ற தெரியாமலேயே இதனை பயன்படுத்தி வருகின்றார். ஆனால் பாட்டி காலத்தில் வெந்தயத்தினை உடல் குளிர்ச்சிக்காக பயன்படுத்திய நிலையில் நாமும் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றோம்.

வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனைஸ் மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இது மட்டுமில்லாமல், டையோஸ்ஜெனின் என்னும் சேர்மமும் உள்ளது.
அந்த வகையில் சுவையான ஐயங்கர் ஸ்டைல் வெந்தய குழம்பு செய்வது எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் 10
கத்தரிக்காய் - 2
மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
புளி - சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்

வறுத்து அரைக்க
தனியா (கொத்தமல்லி விதை)
1 டேபிள் ஸ்பூன் - வெந்தயம்
1 டீ ஸ்பூன் - துவரம்பருப்பு
1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - ½ டீ ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு (உடைத்தது)1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை
முதலில் தேவையான அளவு புளியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் வெந்தயம், துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
இதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் மல்லி சேர்த்து வதக்கி, ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
தேவையான அளவு வெண்டைக்காயை எடுத்து அதனை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வதக்கவும். அதனுடன் கத்தரிக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.

இதனுடன் ஊற வைத்த புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். நன்றாக கொதித்த பின்று சிறிது வெல்லம் சேர்த்து, கடைசியாக தாளிப்பிற்காக கடுகு, வெங்காயம், பெருங்காய தூள் சேர்த்து தாளித்து இறக்கினால் அட்டகாசமான வெந்தய குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |