முடியை கருகருவென மாற்றும் மருதாணி எண்ணெய் - வீட்டிலேயே எப்படி செய்வது?
மருதாணியை வைத்து கூந்தலுக்கு எண்ணெய் செய்து தடவினால் அது கூந்தலை வலுவாக்கி கருமையாக்கும் என அறியப்படுகின்றது. எனவே மருதாணியில் எண்ணெய் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
மருதாணி எண்ணெய்
நாம் செயற்கை பொருட்களை பயன்படுத்துவதை விட்டு விட்டு இயற்கையான பொருட்களை சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தினால் அது நிரந்தரமான பயனை தரும்.
ஆனால் ஒருபோதும் தீங்கை தராது. அந்த வகையில் கூந்தல் பராமரிப்பிற்கு மருதாணி சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இதை எம்முறையிலும் பயன்படுத்தலாம் தீங்கு தராது.
எனவே மருதாணியை வைத்து கூந்தலுக்கு எண்ணெய் தயாரித்து பூசினால் கூந்தல் கருப்பாகவும் வலுவாகவும் மாற்றும். அந்த எண்ணெய் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

எண்ணெய் செய்முறை
முதலில் இதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் 1 கப், மருதாணி பொடி 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு, வெந்தயம் 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும்.
இதனுடன் இரண்டு தேக்கரண்டி மருதாணி பொடியை சேர்க்கவும். பின்னர் சிறிதளவு கறிவேப்பிலையை நன்றாக நசுக்கி அந்த எண்ணெயுடன் சேர்க்க வேண்டும்.

பின்னர் இதில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சூடாக்கவும்.
எண்ணெய் சற்று நிறம் மாறும் வரை சூடாக்க வேண்டும். அதிக நேரம் சூடாக்குவதை தவிர்க்கவும். இவ்வாறு செய்ததும் அடுப்பில் இருந்து எண்ணெய்யை இறக்கி விடவேண்டும்.
கடைசியில் இந்த எண்ணெய் கலவை முழுமையாக ஆறிய பின், ஒரு மெல்லிய துணி அல்லது வடிகட்டியால் எண்ணெய்யை வடிகட்டவும். இவ்வாறு வடிகட்டிய எண்ணெய்யை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, நேரடி சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும்.

இப்படி செய்தால் மருதாணி எண்ணெய் தயாராகி விடும். இந்த எண்ணெய்யை வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தலாம். குறைந்தது ஒரு மணி நேரம் தலையில் ஊறவைத்து, பின்னர் தலைக்கு குளிக்கவும்.
தொடர்ந்து இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம், உங்கள் கூந்தல் இயற்கையாகவே கருமையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |