இரும்புச் சத்து நிறைந்த கீரை கட்லெட்... 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
Iron Rich Food Spinach Cutlet: இரும்புச்சத்து நிறைந்த கீரையில் கட்லெட் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் கீரை ஆகும்.
கீரையில் அதிகமான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள், இரும்புச்சத்து அதிகமாக உள்ள நிலையில், அனைத்து வயதினருக்கும் மருத்துவர்கள் முக்கியமாக பரிந்துரைக்கக்கூடிய உணவாகவும் இருக்கின்றது.
இவ்வளவு ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் கீரையினை பொரியல், கடைசல், வடை இவ்வாறு செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது கட்லெட் எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
தடித்த அவல் - 1 கப்
கீரை - 2 கப் (நறுக்கியது)
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப (வறுக்க)
எள் விதைகள் - சிறிதளவு (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு

செய்முறை
கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு அவலை ஒருமுறை கழுவிட்டு தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும்.
பொடியாக நறுக்கிய வைத்துள்ள கீரையில் நறுக்கிய பெரிய வெங்காயம், வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலாஈ சீரகம், கொத்தமல்லி இவற்றினை சேர்க்கவும்.

மேலும் இதுடன் அவல் மற்று உ்ப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். குறித்த கலவையை கட்லெட் வடிவத்தில் தயார் செய்து, விருப்பம் இருந்தால் இரு புறமும் எள் விதையினை தடவிக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, தயாரித்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வாறு இரண்டு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த சத்தான கட்லெட் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |