தேங்காய் சட்னியை மிஞ்சும் சுவையில் சுரைக்காய் சட்னி! இட்லி, தோசைக்கு செய்து பாருங்க
இட்லி, தோசைக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை, இரவு டிபன் சாப்பிடுபவர்கள் பல வித சட்னிகளை செய்தும் சாப்பிடுவார்கள். இட்லி, தோசைக்கு ஒருமுறை சுரைக்காயில் சட்னி செய்து பார்த்ததுண்டா?
தேங்காய், தக்காளி சட்னிகள் தோற்றுப்போகும் சுரைக்காய் சட்னியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பிஞ்சு சுரைக்காய் - 1
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை - 3 கொத்து
கொத்தமல்லி - சிறிது
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தயிர் - 1 டம்ளர்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பிஞ்சு சுரைக்காயை எடுத்துக் கொண்டு தோலை நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். வாணலியினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, சுரைக்காயை வதக்கவும்.
பின்பு அதில் 4 பச்சை மிளகாய், 2 துண்டு இஞ்சி, 6 பல் பூண்டு சேர்த்து, அனைத்தும் சுருண்டு வரும் வரை நன்கு வதக்க வேண்டும். பின்பு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை துவவும், சிறிது சீரகத்தையும் தூவி வதக்கி இறக்கவும்.
மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, தேவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின்பு 1 டம்ளர் தயிரை ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, வரமிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்தால் சுவையான சுரைக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |