ஒரு தடவை இந்த ஆந்திரா கோங்குரா சிக்கன் செய்ங்க... அப்புறம் தொடர்ந்து செய்வீ்ங்க
சுவையான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
கோங்குரா சிக்கன்
அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த உணவுகளில் ஒன்று தான் சிக்கன். சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிடுகின்றோம்.
சிக்கன் வறுவல், கிரேவி, குழம்பு, கிரில், தந்தூரி என செய்து சாப்பிடும் நிலையில், தற்போது நம்மில் பலர் வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புகிறோம்
அந்த வகையில் ஒன்று தான் ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன். தற்போது சிக்கன் எப்படி செய்வது என்று இங்கு கீழே காணலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (கீறியது)
பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கோங்குரா கீரை செய்ய
கோங்குரா கீரை/புளிச்சக்கீரை - 2 கப் (நறுக்கியது)
பூண்டு - 4 பல்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மசாலா அரைக்க
கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்வரமிளகாய் - 4 சோம்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து, அதில் கொத்தமல்லி விதைகள், வரமிளகாய், சோம்பு, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.
வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்பு சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அடுத்து தேவையான தண்ணீர் சேர்த்து 3 முதல் 4 விசில் விட்டு வேக வைக்கவும்.

பின்பு கோங்குரா மசாலா செய்வதற்கு அடுப்பில் கடாயினை வைத்து எண்ணெய் சேர்த்து அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் புளிச்சக்கீரை உப்பு மற்றும் அனைத்து மசாலா பொருளையும் சேர்த்து வதக்கவும்.
மசாலாவுடன் கீரை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வெந்ததும் குக்கரில் வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக மசாலாவுடன் குக்கரை அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு இறக்கினால் ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன் தயார்.
[QOVTK51
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |