சிக்கன் எடுத்தால் ஒருமுறை இப்படி கோலா உருண்டை செய்து சாப்பிடுங்க... அட்டகாசமான ரெசிபி இதோ
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் கோலா உருண்டை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக சிக்கன் என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கனை சற்று வித்தியாசமாக சாப்பிடக் கொடுத்தால் இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் சிக்கனில் கோலா உருண்டை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
முந்திரி - 20
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 15 பல்
இஞ்சி துண்டு - 1
வரமிளகாய் - 3
கொத்தமல்லி விதை - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 6
ஏலக்காய் - 3
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொத்தமல்லி விதை, வரமிளகாய், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் முந்திரி ஆகியவற்றை வறுத்து ஆற வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றுமு் வறுத்த வைத்த பொருட்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்பு வெங்காயம், மல்லி இலை, சிக்கன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ளவும்.

இந்த கலவையில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிரட்டி, சிறு சிறு உருண்டைகளாக தனியே தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் கோலா உருண்டை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து உருண்டையை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சுவையான சிக்கன் கோலா உருண்டை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |