இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க பிறந்த திகதி என்ன?
பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் குறிப்பிடுகின்றது.
கணித சாஸ்திரதின் பிரகாரம் ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றது. இவை அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் ஒருவரின் கூட்டு எண் அடிப்படையில் பெரும்பாலும் எந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் அமையும் என்றும் யார் யாருக்கு வீட்டார் நிச்சயம் செய்யும் திருமணம் அமையும் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.
21 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசியினர் டென்ஷனின் உச்சத்துக்கே செல்லபப்போகின்றார்கள்...உங்க ராசி என்ன?
காதல் திருமணம் யாருக்கு?
(எண் 1) 1,10,19,28 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள்.இவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதுடன் இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வசீகர முகத்தை கொண்டிருப்பார்கள். குழந்தை பருவ காதலை தேர்வு செய்வதன் மூலம் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியடைவார்கள்.
(எண் 2 ) 2,11,20,29 ஆகிய திகதிகள் : இவர்கள் சந்திரனால் ஆளப்படுவதால் இயல்பாகவே ரொமேன்டிக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் பெரும்பாலும் இவர்களுக்கு காதல் திருமணமே அமையும்.
(எண் 3) 3,12,21,30 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானால் ஆளப்படுகின்றார்கள் இதனால் இவர்களுக்கும் காதல் திருமணம் நடைபெரும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.
(எண் 4) 4,13,22,31 ஆகிய திகதிகள்: இவர்கள் பொது அறிவு நிறைந்தவர்களாகவும் அதிக நினைவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ராகுவின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பதன் காரணமாக பெரும்பாலும் வீட்டாரின் விருப்படியே இவர்களின் திருமண வாழ்க்கை அமையும்.
(எண் 5) 5,14,23 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரத்துக்கும் தனித்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு பொருத்தமாக நபரை கண்டுப்பிடித்து காதலித்து திருமணம் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது.
(எண் 6) 6,15,24 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். இதனால் காதல் திருமணத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
(எண் 7 ) 7,16,25 ஆகிய திகதிகள் : இவர்களுக்கு காதல் திருமணம் இடம்பெற்றால் தான் வாழ்க்கை மகிழ்சியானதாக அமையும். பெரும்பாலும் இவர்களுக்கு காதல் விடயத்தில் அதிக ஆர்வம் இயல்பாகவே இருக்கும்.
(எண் 8) 8,17, 26 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு உறவினர்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் வாழ்வதையே தங்களின் மகிழ்ச்சியாக கொண்டிருப்பார்கள். இதனால் பெரும்பாலும் இவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமே அமையும்.
(எண் 9 ) 9,18,27 ஆகிய திகதிகள் : இவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் பெரும்பாலும் இவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமே அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |