வீட்டில் உட்கார்ந்து கொண்டே தண்ணீர் வரி கட்டலாமாம்! எப்படி..?
பொதுவாக வீடுகளில் இருக்கும் மின்சாரம், நீர், வியாபாரங்கள் என அனைத்திற்கும் வருடத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை வரி என்ற ஒரு கட்டணம் செலுத்த வேண்டும்.
இவற்றை செலுத்துவதற்கு அரசாங்க அலுவலகத்தை தான் நாட வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும்.
இதன்படி. தற்போது வீட்டில் இருந்த படியே தண்ணீருக்கான வரியை கட்டணத்தை செலுத்தலாம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், பொது மக்களின் அசாதாரண நிலைக்காக வரியை வீட்டிலிருந்து செலுத்துவதற்கான புதிய செயலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலில் நமது பெயரை பதிவு செய்து புதிய கணக்கை ஆரம்பிப்பதுடன் இந்த வரி கட்டணத்தை செலுத்த முடியும்.
அந்த வகையில் வரிக்கட்டணம் செலுத்தும் அந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
படிமுறை 1
தண்ணீருக்கான வரியை செலுத்துவதற்கு என இந்திய அரசாங்கம் tnurbanepay.tn.gov.in எனப்படும் ஒரு புதிய வலைத்தளப்பக்கத்தை உருவாக்கியுள்ளது.
Google > search > tnurbanepay.tn.gov.in > options > click the Quick Payment
படிமுறை 2
Open Make Payment > 5 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் Water Supply என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
படிமுறை 3
New tap > Connection Number box தண்ணீர் வரி பில்லில் இருக்கும் Connection Number > click the Search Button இதனை கொடுத்த பின்னர் தண்ணீர் பில் மற்றும் நமது விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அது சரியா என சரி பார்க்க வேண்டும்.
படிமுறை 4
DCB Details box இருக்கும் அதில் Payable Payment என்ற இடத்தில் உங்களுக்கான தண்ணீர் வரி கட்டணம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் எவ்வளவு பணம் என குறிப்பிட்டு Submit கொடுக்க வேண்டும்.
படிமுறை 5
இறுதியாக பணத்தை எப்படி செலுத்த விரும்புகின்றீர்களோ அப்படி கட்டணத்தை செலுத்தலாம்.