10 நிமிடத்தில் கோதுமை மாவில் பஞ்சு போன்ற பனியாரம் - ரெசிபி இதோ
வீட்டில் கோதுமை மா இருந்தால் அதை வைத்து பத்தே நிமிடத்தில் ஒரு சூப்பரான பனியாரம் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பனியாரம்
மாலை நேரங்களில் நமக்கு ஏதாவது சாப்பிடணும் போல தோன்றும். அந்த நேரத்தில் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நாம் வீட்டிலேயே பணியாரம் செய்து சாப்பிடலாம்.
அதாவது இதற்கு கோதுமை மற்றும் வெல்லம் இருந்தால் பணியாரம் செயடவது சுலபம். இதை எப்படி எளிமையாக வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- வெல்லம் அரை கப்
- தண்ணீர் ஒன்டரை கப்
- ஒரு கப் கோதுமை மா
- உப்பு அரை தேக்கரண்டி
- அரை டீஷ்பூன் ஏலக்காய் தூள்
- கால் டீஸ்பூன் சோடா உப்பு
- முந்திரி
- நெய் 1 டீஸ்பூன்
- கால் கப் தேங்காய் துருவல்
செய்யும் முறை
முதலில் வெல்லத்தை நன்றாக பாகு போல காய்ச்சி எடுக்க வேண்டும்.
பின்னர் அந்த வெல்லப்பாகில் கோதுமை மாவு உப்பு மற்றும் சோடா உப்ப போன்றவற்றை சேர்த்து நன்றாக மிகஸ் செய்ய வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் வறுத்த முந்திரி போட்டு நன்றாக கட்டி படாமல் மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் போட்டு மிக்ஸ் செய்து எடுக்க வேண்டும். பின்னர் மிக்ஸ் செய்த கலவையை ஒரு குவளையில் ஊற்றி பணியாரம் சுட்டு எடுத்தால் கமகம என்று பத்தே நிமிடத்தில் கோதுமை பணியாரம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |