இட்லி ரெம்ப பிடிக்குமா? ஒரு முறை இந்த வெஜிடபிள் மசாலா இட்லி செய்து பாருங்க
காலை மற்றும் இரவு உணவாக பலரும் விரும்பும் இட்லியில் வெஜிடபிள் மசாலா இட்லி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான தென்தமிழக மக்களின் காலை மாலை உணவு இட்லியாகவே இருக்கும். ஆவியில் வேக வைக்கும் இட்லி செரிமானத்திற்கு உதவியாக இருக்கின்றது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். வெறும் இட்லி என்று செய்யாமல் சற்று வித்தியாசமான வெஜிடபிள் மசாலா இட்லி செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
வெஜிடபிள் மசாலா இட்லி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
ரவை -2 கப்
தயிர் - 3 ஸ்பூன்
துருவிய கேரட்- ½ கப்
மெல்லியதாக அரிந்த குடமிளகாய்-1
கொத்தமல்லித் தழை- சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

மசாலாவிற்கு
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சைப் பட்டாணி-1 கப்
மிளகாய்த் தூள்- ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ரவை, தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கரைத்து பத்து நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின்பு கடாய் ஒன்றில் எண்ணெய், கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம், பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். தொடர்ந்து மஞ்சள், மிளகாய் தூள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

ஊற வைத்துள்ள ரவையில் குடைமிளகாய், துருவிய கேரட், கொத்தமல்லி இலை இவற்றினை சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவை, இந்த ரவை கலவை இட்லி போன்று ஊற்றி, மேலே பட்டாணி மசாலா கலவைவை வைத்து மீண்டும் ரவை கலவையினை மேலே ஊற்றி ஆவியில் வேக வைத்து பரிமாறலாம்.
வெஜிடபிள் ரவா இட்லிக்கு நடுவில் வைக்கும் பட்டாணி மசாலா, உங்களுக்கு பிடித்தமான காலிபிளவர், பனீர் இவற்றினை கூட சேர்த்து செய்யலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |