தக்காளி சட்னியை இப்படி செய்து பாருங்க - ஒரு துளி கூட மிஞ்சாது
வீட்டில் தக்காளி சட்னி செய்யும் போது அதில் சில பொருட்களை சேர்த்து செய்தால் அதன் சுவை இரட்டிப்பாகும் எனப்படுகின்றது.

தக்காளி சட்னி
தக்காளி எல்லோரது வீட்டிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு பழமாகும். அதிலும் தக்காளி சட்னி என்றால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதன் சுவை இனிப்பும் புளிப்பும் கலந்த, மிதமான காரம் கொண்ட ஒரு சுவையை கொடுக்கும்.
இதைச் செய்வது மிகவும் எளிது, இதன் சுவையும் அற்புதமானது. ஆனாலும் தக்காளி சட்னியை எப்படி இன்னும் சுவையை அதிகமாக்கி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- தக்காளி – 3-4 (நறுக்கியது)
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2-3 (நறுக்கியது)
- பூண்டு – 3-4 பல் (நறுக்கியது)
- மிளகாய் தூள் – 1/2 முதல் 1 மேசைக்கரண்டி (காரத்திற்கு ஏற்ப)
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- கடுகு – 1/2 மேசைக்கரண்டி
- சீரகம் – 1/4 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி இலை – 1 மேசைக்கரண்டி (இறுதியில் சேர்க்க)
- தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம் நறுமணம் வீசும் அளவிற்கு நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் பூண்டு மற்றும் பச்சை மிளகாய்களைச் சேர்த்து லேசாக வதக்கவும். பூண்டின் சுவை எண்ணெய்யில் இறங்கும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

தேவைப்பட்டால் தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்.தக்காளி கெட்டியாகி வந்தால் அது தான் வெந்ததிற்கான பதம்.
மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து கெட்டியானதும் இறுதியாக, கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த சுவையான தக்காளி சட்னியை சப்பாத்தி இட்லி தோசையுடன் சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |