சப்பாத்திக்கு சுவையான மீல் மேக்கர் கிரேவி... வெறும் 10 நிமிடம் போதும்
சப்பாத்திக்கு அருமையான மீல் மேக்கர் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மீல் மேக்கரில் புரதச்சத்து அதிகமாக இருக்கின்றது. சப்பாத்தி, பூரிக்கு அருமையான சைட் டிஷ்ஷாக இருக்கும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
சப்பாத்தி மற்றும் பூரிக்கு மட்டுமின்றி புலாவ், சாதம் இவற்றிற்கும் இந்த கிரேவி மிகவும் ஏற்றதாகவும் இருக்கின்றது.
இந்த பதிவில் மீல் மேக்கர் கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - 2 கப்
சுடுநீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 *
புதினா - 10 இலைகள்
கொத்தமல்லி - சிறிது
முந்திரி - 7
பெரிய தக்காளி - 1
உப்பு - சுவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு...
கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன்
மீல் மேக்கர்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
கிரேவி தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
அரைத்த மசாலா விழுது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா/சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
உப்பு - சிறிது
கொத்தமல்லி - சிறிது

செய்முறை
மீல் மேக்கரை முதலில் நன்றாக கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு தண்ணீரினை வடிகட்டிவிட்டு குளிர்ந்த நீரில் போட்டு இரண்டு முறை கழுவ வேண்டும்.
தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து தனியாக வைக்கவும். பாத்திரம் ஒன்றில் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மீல் மேக்கரை போட்டு பிரட்டி 5 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்.
வாணலியினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து வதக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்த நன்றாக வதக்கி எடுத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள மீல் மேக்கரை லேசாக வறுத்து தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பும் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும். அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
ஜாரினை கழுவி சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா இவற்றினை சேர்த்து கிளறவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்ததும், மீல் மேக்கரை சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைத்து கடைசியாக கொத்தமல்லியை தூவி இறக்கினால் மீல் மேக்கர் கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |