இறால் பிரியாணி ஒருமுறை இப்படி செய்து பாருங்க... அம்புட்டு ருசியா இருக்கும்
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான இறால் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மட்டன் மட்டுமின்றி கடல்வகை உணவுகளும் அதிகமாகவே பிடிக்கும். அதிலும் இதனை வைத்து பிரியாணி என்றால் சொல்லவே வேண்டாம்.
அவ்வாறு சிக்கன் மட்டன் பிரியாணி சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்காக இறால் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
இறால் - அரை கிலோ
பாஸ்மதி அரிசி - 2 டம்ளர்
எண்ணெய் - 3 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
நெய் - 1 ஸ்பூன்
முந்திரி - 8
பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
தக்காளி - 2
பச்சைமிளகாய் -3
பிரியாணி மசாலா - 1
ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை
குக்கர் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, பிரியாணி இலை, முந்திரி, பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் இவற்றினை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, புதினா, மல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றினை சேர்த்து வதக்கவும். எண்ணெய் சற்று பிரிந்து வந்ததும், சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை மற்றும் பிரியாணி மசாலா, மிளகாய் பொடி, தேவையான உ ப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்த பின்பு, கழுவி ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.
பின்பு நெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, வாழை இலையை வைத்து மூடி அரைமணி நேரம் கழித்து எடுத்தால் அசத்தலான இறால் பிரியாணி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |