காரசாரமான பூண்டு துவையல்: ஒரு தடவை இப்படி செய்து பாருங்க
வீட்டில் நாம் சமைத்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதன்படி பொதுவாக அனைவரது வீட்டிலும் பூண்டு வைத்து சமைப்பது வழக்கம்.
பூண்டை தோல் உரிப்பதை விட தோலுடன் சாப்பிடுதல் மிகவும் நன்மை தரும்.பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது இதயத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றது.பூண்டு தோலில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
எனவே பூண்டு பேஸ்ட் செய்யும் போது பூண்டு தோலை சேர்த்து பேஸ்ட் செய்வது நல்லது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இத்தனை நன்மை கொண்ட பூண்டை வைத்து பூண்டு மிளகாய்த் துவையல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- பச்சை மிளகாய் - 20
- பூண்டு - 10 பற்கள்
- கல் உப்பு - முக்கால் மேசைக்கரண்டி
- நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
- கடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரைத் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்யும் முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை தோலுரித்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அரை மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, சூடானதும் மிளகாய்களைப் போட்டு கருகிவிடாமல் வறுத்தெடுத்து ஆறவிடவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும்.
பிறகு அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டுப் பற்களையும் சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |