சப்பாத்தி ரொம்ப சாஃப்டா வரணுமா? இதை செய்தாலே போதும்
சப்பாத்தி ரொம்ப மிருதுவாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான நபர்களுக்கு பிடித்தமான டிபன் என்றால் சப்பாத்தியும் ஒன்று. சப்பாத்தி என்றாலே புஸ் புஸ் என்றும், மென்மையாகவும் இருந்தாலும், எத்தனை வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டிருப்போம்.
அவ்வாறு மிருதுவாக இருந்தால், குறைவாக சாப்பிடுபவர்கள் கூட இன்னும் அதிகமாக கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். தற்போது சப்பாத்தி உப்பி வருவதற்கு எவ்வாறு மாவு பிசைய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - சப்பாத்தி சுட தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தில் தேவையான அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக்கொண்டு அதில் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு கிளறிவிடவும்.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவு பிசையவும். விரல்களால் அழுத்தி பிசையாமல் உள்ளங்கையால் அழுத்தி நன்கு பிசைய வேண்டும்.
சப்பாத்தி மாவை பிசைந்த பின்பு ஊற வைக்க வேண்டாமாம். சப்பாத்தி நன்கு உப்பி வருவதற்கு மாவை உருட்டும் விதத்தில் கவனம் செலுத்த வேண்டுமாம்.
சிறிய உருண்டையாக முதலில் எடுத்துக்கொண்டு அதனை சப்பாத்தி கல்லில் வைத்து தேய்த்து, பின்பு அதன் மீது சிறிதளவு எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும்.
பின்பு முக்கோண வடிவில் சப்பாத்தியைக் மடித்துக் கொண்டு வந்த பின்பு, எப்பொழுதும் போன்று மீண்டும் சப்பாத்தி கட்டையால் தேய்த்து எடுத்தால் சப்பாத்தி நன்கு உப்பி வரும்.
இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் நன்கு சூடானதும், உயர் தீயில் வைத்து, திருப்பி திருப்பி போட்டு சப்பாத்தியை சுட வேண்டும்.
குறைவான தீயில் வைத்து சப்பாத்தி சுட்டால், சப்பாத்தி வரட்டி போன்று மாறிவிடும். எனவே உயர் தீயில் வைத்து சப்பாத்தியை சுடுங்கள். இப்படி செய்தால் சப்பாத்தி நன்கு உப்பி வரும் மற்றும் நீண்ட நேரம் சாப்ட்டாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |