தீபாவளிக்கு அதிரசம் மென்மையாக செய்யணுமா? இதை சேர்த்தால் போதும்
திபாவளிக்கு நாம் பலகாரம் செய்வத வழக்கம். தற்பொத வருகின்ற திபாவளிக்கு எல்லொரும் வீட்டில் பலகாரம் செய்ய ஆரம்பித்து இருப்பீர்கள்.
அந்த அளவிற்கு பலகாரங்கள் தீபாவளி பண்டிகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.நாம் பலகாரங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம்.
பலகாரங்கள் வழியே பகிரப்படும் இந்த மகிழ்ச்சி பண்டிகைகளின் போது அதிகமாகும். அந்த வகையில் அதிரசம் எனும் பலகாரம் மிகவும் மென்மையாக எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 2 கிலோ பச்சரிசி
- ஒன்றரை கிலோ வெல்லம்
- 5 ஏலக்காய் துண்டுகள்
- அதிரசம் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்
செய்யும் முறை
முதலில் 2 கிலோ பச்சரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 6 முதல் 7 மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசியை எடுத்து ஒரு பெரிய துணியில் பரப்பி காய வைக்க வேண்டும்.
இது 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே காய விட வேண்டும். காய வைத்த அரிசியை எடுத்து ஒரு மிக்சியில் போட்டு பொடியாக அரைக்க வேண்டும். இதனுடன் 4 ஏலக்காய் தூண்டுகளை போட்டு அரைக்க வேண்டும்.
அரைத்த மாவை ஒரு சல்லடை வைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அழுத்தி வைத்துக் கொள்ளவும். பின்னர் பாகு காய்ச்சி ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி காய விட வேண்டும்.
அதில் வெல்லத்தை நுணுக்கி போட வேண்டும். வெல்லம் முழுவதுமாக கரைய வேண்டும். இதனை மிதமான தீயில் காயச்ச வேண்டும். கம்பி பதத்திற்கு வரும் போது அடுப்பை அனைத்து விட வேண்டும்.
வேறு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் காய்ச்சிய வெல்லப் பாகை ஊற்றி பார்க்க வேண்டும். நன்றாக உருட்டும் பதம் வந்தால் சரியாக உள்ளது என அர்த்தம்.
இந்த பாகை அரைத்த அரிசி மாவுடன் சேர்த்து கலந்து விட்டு ஒரு நாள் முழுவதும் அப்படியே விட வேண்டும்.
ஒரு நாள் முழுவதும் ஊறிய மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு இழையில் வைத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
மிதமான தீயில் பொரித்து எடுத்தால் மட்டுமே அதிரசத்தின் உள்ளேயும் நன்றாக வெந்து வரும். இவ்வாறு செய்யும் போது மிகவும் மென்மையான அதிரசம் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |