வீட்டுல பூஜைக்கு வாங்குன பொரி மீதம் இருக்குதா? ஈஸியா தோசையாக சுடலாம்
வீட்டில் பொரி இருந்தால் அதை வைத்து காலை உணவாக தோசை செய்வது எவ்வாறு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை உணவாக பெரும்பாலான தமிழர்கள் இட்லி மற்றும் தோசை என தான் சாப்பிடுகின்றனர். தோசையினை பல வகைகளாக சமைத்து சாப்பிடுகின்றனர்.

ஆனால் வீட்டில் மாவு இல்லாமல் இருக்கும் போது பொரியை வைத்து தோசை செய்வது என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை.
பூஜைக்கு வாங்கியுள்ள பொரி மீதமாக இருந்தால் அதனை வைத்து தோசை செய்யலாம். அவ்வாறு பொரி தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பொரி - 3 கப்
ரவை - 1 கப்
தயிர் - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 (துருவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
இட்லி பொடி - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் பொரி மற்றும் அதனுடன் ரவை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தயிர் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை பாத்திரம் ஒன்றில் மாற்றிக்கொண்டு, ஜாரினை அலசி அந்த தண்ணீரையும் மாவுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.

மாவு ஊறியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம், துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தோசையாக ஊற்றவும். அதன் மீது சிறிதளவு இட்லிபொடி தூவிக்கொள்ளவும். முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சுவையான பொரி தோசை தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |