சுவையான வேர்கடலை புதினா சட்னி... ஒரு தடவை இப்படி செய்து பாருங்க
காலை உணவு இடலி, தோசைக்கு ஏற்ப வேர்க்கடலை புதினா சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
காலை நேர உணவு என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியம் ஆகும். நாள்முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைப்பதற்கான ஆற்றலை அளிப்பது காலை உணவு தான்.
பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி தோசை இவை தான் காலை உணவாக இருக்கும். அந்த வகையில் இதற்கு சாம்பார், சட்னி செய்வார்கள். சற்று வித்தியாசமான வேர்கடலையில் புதினா சேர்த்து வேர்க்கடலை புதினா சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வறுத்த வேர்க்கடலை - அரை கப்
பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கவும்)
புதிய இலை - கால் கப்
கொத்தமல்லி இலை - கால் கப்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதனுடன் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து வதக்கி இறக்கவும். இவற்றினை ஆற வைத்து மிக்ஸி ஸாரில் சேர்த்துக் கொள்ளவும்.

இதனுடன் வறுத்த வேர்க்கடலை, உப்பு, புளி இவற்றினையும் சேர்த்துக் கொள்ளவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த சட்னியை கிண்ணத்திற்கு மாற்றி, கடாயை அடுப்பில் வைத்து தாளிப்பதற்கு எண்ணெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றினால் சுவையான புதினா வேர்க்கடலை சட்னி தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |