ஆரோக்கியமான காலை உணவு 'வேர்க்கடலை தோசை'.. 5 நிமிடத்தில் தயார் செய்யலாம்
காலை உணவு எப்பொழுதும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
புதிதாக பிறக்கும் நாளில் காலை உணவு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். ஒருவர் நாள் முழுவதும் ஆற்றலுடனும், சுறுசுறுப்புடனும் செலய்படுவதற்கு காலை அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
காலை உணவு ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். காலை உணவை ஆரோக்கியமாக தொடங்க விரும்பினால் 'வேர்க்கடலை தோசை' செய்து சாப்பிடுங்கள்.
வேர்க்கடலையில் புரதம், நல்ல கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வித்தியாசமான முறையில் ஆரோக்கியமான வேர்க்கடலை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை (வறுத்து தண்ணீரில் ஊறவைத்தது) - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சின்னது
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரில் ஊறவைத்த வேர்க்கடலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.
பிறகு அந்த மாவில், உளுத்தம்பருப்பு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், சீரகம், தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது எண்ணெய் சேர்த்து அதில் மாவு ஊற்றி, தோசை வார்க்கவும்.
பின்பு தோசையை சுற்றி சிறிது எண்ணெய் விட்டு, மிதமான தீயில் வேக வைத்து, பொன்னிறமாக மாறியதும், திருப்பி போட்டு மீண்டும் வைத்து எடுத்தால், சுவையான வேர்க்கடலை தோசை ரெடி.
வேர்க்கடலை தோசையுடன், தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |