பிரெட்டுக்கு சூப்பரான காம்பினேஷன் என்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!
பொதுவாக கடையில் வாங்கும் பீனட் பட்டரை விடவும் நாம் வீட்டிலுள்ள சில பொருட்களை பயன்படுத்தி செய்யும் பீனட் பட்டர் மிகவும் ஆரோக்கியமானது.
தொடர்ந்து வீட்டிலிருக்கும் சிறுவர்கள் பிரெட்டுடன் இதனை சேர்த்து விருப்பத்துடன் உண்பார்கள். அந்த வகையில் பீனட் பட்டர் எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
- வறுத்த வேர்க்கடலை - 2 கப்
- கடலை அல்லது ரைஸ் ப்ராண்ட் எண்ணெய் - 6 டீஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- தேன் - 2 டீஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் வறுத்த வேர்க்கடலை - 2 கப் ஒரு வாணில் போட்டு நன்றாக வறுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும். இதனுடன் முழு காய்ந்த கடலைகள் இருப்பின் அதனை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து வறுத்த வேர்கடலையை மிக்ஸியில் போட்டு மா பதம் வரும் வரை நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.
அரைத்த வேர்க்கடலை மாவுடன் தேன் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
பின்னர் அதனை காற்று உட்புகாத ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைக்கவேண்டும். தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த பீனட் பட்டர் தயார்...!