Paneer Rajma Masala: வீட்டுல பன்னீர் இருக்குதா? ஒருமுறை இப்படி செய்து பாருங்க
சுவையான பன்னீர் ராஜ்மா மசாலா எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அனைவரும் அதிகம் விரும்பி சாப்பிடும் காலை உணவான சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் பன்னீர் ராஜ்மா மசாலா. இதனை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக்கியது)
ராஜ்மா - 1 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து அதில் கழுவி வைத்த ராஜ்மாவை போடவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
பின்பு ராஜ்மாவையும், தண்ணீரையும் தனி பாத்திரத்தில் எடுத்து வைத்த பின்பு, மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் போட்டு தாளிக்கவும். பின்பு அரைத்த விழுதையும் சேர்த்து வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கிய பின்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் தருணத்தில் நறுக்கி வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு அதனுடன் வேகவைத்த ராஜ்மா மற்றும் நீரை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, கடைசியாக கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |