நெல்லை ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை.... 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
நெல்லை ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் என்றாலே பெரும்பாலான நபர்களுக்கு அல்வா தான் ஞாபகம் வரும்.
ஆனால் இது மட்டுமின்றி நெல்லையில் பாரம்பரிய உணவுகளும் மிகவும் பிரபலமாகவே இருக்கின்றது. பால் கொழுக்கட்டை நெல்லையில் தற்போதும் பாரம்பரிய உணவாகவே இருக்கின்றது.
நெல்லை மாவட்ட ஸ்டைல் பால் கொழுக்கட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - அரை கிலோ
தேங்காய் - 1 (பாலாக எடுத்துக் கொள்ளவும்)
பால் - 250 மில்லி
வெல்லம் - 400 கிராம்
ஏலக்காய் - ஒரு சிட்டிகை
உப்பு - சிறிதளவு
நெய் - ஒரு ஸ்பூன்
செய்முறை
பாத்திரம் ஒன்றில் தண்ணீரைக் காய்ச்சி அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளவும். பின்பு அரிசி மாவில் சுடுதண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கட்டி படாமல் கெட்டியான மாவாக கிளறி வைத்துக் கொள்ளவும்.
மாவில் சூடு சிறிது குறைந்தததும், சிறு சிறு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் பசும்பால் மற்றும் தேங்காய் பால் சேர்த்து மிதமாக தீயில் கொதிக்கவிடவும்.
தற்போது நீங்கள் தயார் செய்திருக்கும் உருண்டைகளை கொதிக்கும் பாலில் மெதுவாக சேர்க்கவும். பின்பு வெல்லத்தையும் சிறிதளவு நீரில் கரைத்து, வடிகட்டி அதனையுட் பால் மற்றும் கொழுக்கட்டையில் ஊற்றவும்.
ஏலக்காய் பொடியை சேர்த்து இறுதியாக ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்து கலக்கிய பின்பு, கொழுக்கட்டை நன்றாக வெந்த பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதனுடன் குங்குமப்பூ சேர்த்தால் கூடுதல் ருசியாக இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |