Mango Rice: வெறும் 10 நிமிடத்தில் மாங்காய் சாதம் செய்வது எப்படி?
சுவையான மாங்காய் சாதம் வெறும் 10 நிமிடத்தில் எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மாங்காய் ஊறுகாய், வற்றல் போடுவதற்கு மட்டுமின்றி, சாம்பார், புளி குழம்பு, மீன் குழம்பு போன்ற சமையலுக்கு அதிகமாக பயன்படுத்துவது உண்டு.
மாங்காய் குழம்பில் சேர்த்தாலே அதற்கென தனி ருசி உண்டு. ஆனால் மாங்காயில் சாதம் செய்து சாப்பிட்டதுண்டா? வெறும் 10 நிமிடத்தில் மாங்காய் சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
வடித்த சாதம் - 2 கப்
மாங்காய் - 1 (துருவியது)
காய்ந்து மிளகாய் - 4
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, வேர்க்கடலை, உளுந்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.
பின்பு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காய தூள், மஞ்சள் தூள் இவற்றினை சேர்க்கவும். தொடர்ந்து துருவிய மாங்காயை உள்ளே சேர்த்து அதற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
பிறகு மீண்டும் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு முறை கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக வடித்து வைத்துள்ள சாதத்தை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சேர்த்து இறக்கினால், அட்டகாசமான மாங்காய் சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |