தர்பூசணி பழத்தில் பரோட்டா.... உணவு பாதுகாப்பு துறை கூறிய விஷயம்
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் புது வகையான பரோட்டாவாக தர்பூசணி பரோட்டா அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த உணவு குறித்து பாதுகாப்பு துறை கூறிய விடயத்தை தெரிந்து கொள்வோம்.
பொதுமாக மதுரை என்றாலே கோவில் நகரம் என்றும் தூங்கா நகரம் என்றும் கூறப்படுகின்றது. இதற்கு அடுத்து உணவுகளுக்கு மிகவும் பிரபலமாகவும் இருக்கின்றது.
இங்குள்ள ஜிகர்தண்டா, பன் பரோட்டா என பல வகையான உணவுகள் பிரபலமாக இருக்கின்றது. பரோட்டா வகையில் அதிகமாக இருந்தாலும் தற்போது தர்பூசணி பரோட்டா என்பதையும் செய்து அசத்துகின்றனர்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் தர்பூசணி பழத்தில் எவ்வாறு பரோட்டா செய்வது என்பதை தானே யோசிக்கின்றீர்கள். ஆம் மதுரையில் தர்பூசணி பரோட்டாவை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதில் வெற்றியும் கண்டுள்ளாராம்.
முதன் முதலில் இந்த தர்பூசணி பரோட்டா மதுரையில் இருக்கும் விளக்குத்துண் பகுதியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு அது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது மாவட்டம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.
தர்பூசணி பரோட்டா செய்வது எப்படி?
தர்பூசணி பரோட்டாவிற்கு எப்பொழுதும் போன்று பரோட்டா மாவு தயார் செய்யும் நிலையில், இதனுடன் தர்பூசணி பழத்தின் சாற்றை சேர்த்துக் கொள்கின்றனர்.
தர்பூசணி சாறு சேர்க்கும் போது ஒருவிதமான சுவையைக் கொடுக்கின்றது. மாவை எப்பொழுதும் போல பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி பரோட்டா சுடுகின்றனர்.
சில ஹோட்டல்களில் அந்த பரோட்டாவிற்கு நடுவில் தர்பூசணி பழத்தினை வட்டமாக வெட்டி வைத்து பரோட்டாக செய்கின்றனர்.
தர்பூசணியில் ஏற்கனவே இனிப்பு இருப்பதால் சிலர் வெறும் பரோட்டாவாகவும், சிலர் வழக்கம் போன்று சால்டா ஊற்றியும் சாப்பிடுகின்றனர்.
ஆனால் இந்த உணவு கலவையானது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் பரோட்டா ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுக்கும். அதுவே தர்பூசணி மிக எளிதாக ஜீரணமாகிவிடும். இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது செரிமான அமைப்பில் பிரச்சனை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |