பனீரை இந்த மாதிரி குருமா வைச்சி பாருங்க.. குழந்தைங்க போட்டி போட்டு சாப்பிடுவாங்க
புரதச்சத்து நிறைந்த பனீரில் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் லகோரி பன்னீர் குருமா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவில் ஒன்றாக பனீர் இருக்கின்றது.
இதில் அதிகளவு புரதச்சத்து மற்றும் கால்சியம் இருக்கும் நிலையில், ஆரோக்கியமான உணவாகவும் இருக்கின்றது. அதிலும் சற்று வித்தியாசமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் லகோரி பனீர் குருமா செய்வதைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பன்னீர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி -2
வெள்ளை பூண்டு - 5 பல்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
தயிர் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
பனீரை சிறு துண்டுகளாக வெட்டி பேனில் எண்ணெய் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு நறுக்கிய வெங்காயத்தினை பேனில் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தினையும், பூண்டு மற்றும் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அதே மிக்ஸியில் இரண்டு தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம், அரைத்து வைத்த பேஸ்ட், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்பு மசாலா பொடிகள் மற்றும் உப்பு இவற்றினை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
இதனை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இதனுடன் பன்னீரை சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்தால் லாகரி பன்னீர் குருமா தயார்.
இதனை சப்பாத்திக்கு மட்டுமின்றி, தோசை, இட்லி, சாதம், புரோட்டா இவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |