கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
இட்லி தோசைக்கு பக்காவா பொருந்தும் கொங்கு நாட்டு தக்காளி குருமா எப்படி செய்வது என்பதை பதிவில் பார்க்கலாம்.
தக்காளி குருமா
எல்லோரது சமையலிலும் தக்காளி ஒரு முக்கியமான இடத்தை பிடித்து வதை்துள்ளது. தக்காளி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சருமப் பளபளப்பிற்கு உதவுகிறது.

இதில் வைட்டமின் C, A, மற்றும் லைகோபீன் சத்துக்கள் நிறைந்த இது, புற்றுநோய் தடுப்பு, செரிமானம் மற்றும் கண் பார்வைத் திறனை மேம்படுத்துதல் போன்ற நன்மைகளை தருகிறது.
பெரும்பாலும் தக்காளியை வைத்து எல்லோரும் சட்னி சாம்பார் குழம்பு சாஸ் ஜேம் என பல வகை டிஷ் செய்தாலும் அதில் குருமா செய்து சாப்பிடுவது சுவை அதிகம்.

தேவையான பொருட்கள்
- 5 பழுத்த தக்காளி
- 5 பச்சை மிளகாய்
- 10 சின்ன வெங்காயம்
- 3 பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் சோம்பு
- 5 முந்திரி
- பருப்பு 1/4 கப்
- துருவிய தேங்காய்
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 2 கிராம்பு
செய்முறை
முதலில் மிக்ஸியில் சோம்பு, முந்திரி பருப்பு, துருவிய தேங்காய், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்புடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அதில் நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை குறைந்த தீ வைத்து வதக்கவும்.

தக்காளி குழையும் வரை மென்மையாக மாற 7 முதல் 8 நிமிடங்கள் வரை வதக்கவும். இதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பின்னர் அதே பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, 1/4 ஸ்பூன் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் அரைத்த தக்காளி, வெங்காயம் கலவையை சேர்த்து கிளறவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். இதை நன்றாக கிளறி ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின்னர் அரைத்த முந்திரி பருப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் தக்காளி குருமா தயார்.