புற்றுநோயிற்கு மருந்தாகும் கருப்பு கவுனி லட்டு.. சிம்பிள் ரெசிபி
பொதுவாக மருத்துவ குணமிக்க மூலிகைப் பொருட்களில் கருப்பு கவுனி அரிசியும் ஒன்று.
இதில், மாவுச்சத்து குறைந்த நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. இந்த சத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கின்றது.
பார்ப்பதற்கு கருமையாக இருக்கும் இந்த கவுனி சமைத்த பிறகு இலேசான ஊதா நிறமாக மாறும் மற்றும் பருப்பு சுவை போல் இருக்கும் ஆனால் ஆரோக்கியத்திற்கு அளவில்லாமல் கொடுக்கின்றது.
இவ்வளவு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் கருப்பு கவுனியை வைத்து எப்படி லட்டு செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி - 1 கப்
வெல்லம் - முக்கால் கப் ( இனிப்புக்கேற்ப கூட்டி அல்லது குறைத்து கொள்ளலாம்)
நெய் - கால் கப் கொட்டைகள், விதைகள் - தேவைக்கேற்ப
நறுமண மசாலாக்கள் - தேவைக்கேற்ப
உப்பு - சிட்டிகை
தண்ணீர் - தேவைக்கு
ஏலத்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை
கருப்பு கவுனி அரிசியை நன்றாக சுத்தம் செய்து சுமாராக 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி நிழலில் மெல்லிய துணியில் ஈரம் போக உலர்த்தவும். நீர் முழுவதும் வற்றியதும் அரிசியை மிக்ஸியில் சன்னமாக அரைக்கவும்.
பின்னர் உப்பு சேர்த்து பிசையவும். மாவின் அளவுக்கேற்ப ஒன்றுக்கு இரண்டு வீதம் தண்ணீரை கொதிக்க விட்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாவை போட்டு கிளறவும்.
இதனை தொடர்ந்து சர்க்கரை பாகுவில் கொஞ்சமாக நெய் விட்டு தயார் செய்து கொள்ளவும்.
மா, பாகு, இவை இரண்டையும் மிதமான வெப்பநிலையில் அடுப்பில் வைத்து கொண்டே கிளறவும். கிளறும் போது அல்வா பதத்திற்கு வரும்.
அப்போது நெய்யில் கொட்டைகள், விதைகள் மற்றும் ஏலக்காய் போட்டு வறுத்து மாவில் சேர்க்கவும். கிளறி விட்டு உருண்டையாக லட்டு பிடித்து பாத்திரத்தில் அடுக்கி வைத்தால் சுவையான கருப்பு கவுனி லட்டு தயார்!
முக்கிய குறிப்பு
3-4 நாட்களுக்கு வைத்து லட்டு சாப்பிடலாம்.
நீரழிவு நோயாளர்கள் இனிப்பு சேர்த்து சாப்பிட விரும்பாவிட்டால் இனிப்பு சேர்க்காமல் எடுத்து கொள்ளலாம்.
காரம் எடுத்து சாப்பிட விரும்பினால் காரம் சேர்த்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |