கருப்பட்டி இட்லி செய்வது எப்படி? உடம்பிற்கு ரொம்பவே ஆரோக்கியமாம்
காலை உணவாக எடுத்துக் கொள்ளும் இட்லியில் கருப்பட்டி இட்லி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இட்லி
காலை உணவு என்றாலே பெரும்பாலான இந்தியர்களின் வீடுகளில் இட்லி தான் இருக்கும். இட்லிக்கு சட்னி, சாம்பார் என வைத்து சாப்பிடுவது தென்னிந்திய மக்களின் பழக்கமாகும்.
காலை மட்டுமின்றி இரவு நேரத்திலும் இட்லி, தோசையையே விரும்பி சாப்பிடுகின்றனர். இட்லி வேக வைத்து சாப்பிடும் உணவாக இருப்பதால் வயிறு செரிமானம் சீராக இருக்கின்றது. மேலும் வீட்டிலேயே இதற்கு தேவையான மாவையும் தயார் படுத்திக் கொள்ளலாம்.
மாவு அரிசி மற்றும் உளுந்து இவற்றினை சரியான அளவில் போட்டு அரைத்து வைத்தால், இட்லியும் பஞ்சு போன்று வரும். தற்போது கருப்பட்டி இட்லி எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
இட்லி மாவு
கருப்பட்டி
பாசிப்பருப்பு
உப்பு
தேங்காய் துருவல்

செய்முறை
முதலில் பாசிப்பருப்பை வெறும் பாத்திரத்தில் வறுத்து எடுக்கவும். இதையடுத்து கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்யவும்.
பின்னர் காய்ச்சிய பாகை வடிகட்டி இட்லி மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து கலந்து, அதனை இட்லியாக ஊற்றவும்.
இறுதியில் வறுத்து வைத்த பாசிப்பருப்பு மற்றும் தேங்காய் துருவலை தூவி வேகவிட வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |