கூந்தலை கருப்பாக்கும் மாயாஜால எண்ணெய்- வெறும் இரண்டே பொருள்கள் போதும்
பொதுவாக தற்போது இருக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகமாக தலைமுடி உதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த பிரச்சினைகள் ஆரோக்கியம் குறைபாடு, அதிகமான மாசு, கலரிங் மற்றும் கென்சர் போன்ற கொடி நோய்களின் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.
இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுமாயின் ஆரம்பத்திலே சிறந்த மருத்துவர்களை நாட வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் வழுக்கை கூட ஏற்படலாம்.
இதன்படி, தலைமுடி உதிர்வு பிரச்சினைக்கு சிறந்த மருந்தாக செம்பருத்தி பூ மற்றும் இலைகள் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் இவை தலைமுடி வளர்ச்சி, பொடுகு, அடர்த்தியான முடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது.
அந்தவகையில் செம்பருத்தி பூவை வைத்து திட்டு திட்டாக தலைமுடி வளர வைக்கும் எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி இலை மற்றும் பூக்கள் - ஒரு கைப்பிடி
- தேங்காய் எண்ணைய் - 1/2 லிட்டர்
- கறிவேப்பிலை - தேவையானளவு
செய்முறை
முதலில் செம்பருத்தி இலை மற்றும் பூக்களை எடுத்து நன்றாக மிக்ஸி சாரில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் தேங்காய் எண்ணையை ஒரு கடாயில் ஊற்றி நன்றாக சூடேற்றி அதில் அரைத்து வைத்த செம்பருத்தியை போட்டு நன்றாக காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இளம் சூடானதும் அதனுடன் கறிவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த செம்பருத்தி எண்ணெய் தயார்!
பயன்படுத்தும் முறை
- பொதுவாக எண்ணெய் தலையில் வைத்து நன்றாக ஊற விட வேண்டும்.
- அதேபோல் இந்த எண்ணெயையும் குளிப்பதற்கு முன் போட்டு நன்றாக ஊறவிட வேண்டும்.
- சுமார் 1/2 மணி நேரம் ஊறிய பின்னர் சிகைக்காய் போட்டு குளிக்க வேண்டும்.
- இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறைகள் செய்ய வேண்டும்.
நன்மைகள்
- முடி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
- கூந்தலிற்கு பளபளப்பு தன்மை அதிகரிக்கும்.
- தலைமுடி அடர்த்தியாகும்.
- பொடுகு பிரச்சினை நீங்கும்.
- நரை முடி காலப்போக்கில் மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |