சுவையான ஹரியாலி முட்டை குழம்பு - காரசாரமான சுவையில் எப்படி செய்வது?
நம்மிடம் அதிகமான நேரமில்லை ஆனால் ஏதாவது சைட் டிஷ் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு இந்த சுவையான ஹரியாலி முட்டை குழம்பு சரியாக தெரிவாக இருக்கும்.
இதை செய்ய, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம் போன்றவற்றை அரைத்து பச்சை மசாலா அரைக்க வேண்டும். இந்த முட்டை கறி பார்ப்பதற்கு கலர்புல்லாக இருப்பதால் இதை சிறியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதற்கு முட்டை மூலபொருளாக இருந்தால் மட்டும் போதும். இதை சப்பாத்தி சாதம் ரொட்டி இடியப்பம் என எந்த உணவுடனம் வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- வேகவைத்த முட்டைகள்
- புதினா
- கொத்தமல்லி இலைகள்
- பச்சை மிளகாய்
- இஞ்சி,
- பூண்டு
- வெங்காயம்,
- தக்காளி
- தயிர் அல்லது தேங்காய் பால்
- மசாலா தூள்கள் (மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்)
- சீரகம்,
- சோம்பு,
- பட்டை,
- கிராம்பு (தாளிக்க) கடுகு எண்ணெய்,
- உப்பு

செய்முறை
முதலில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் வேகவைத்த முட்டைகளின் தோலை உரித்து, கத்தியால் லேசாக கீறிக்கொள்ளவும்.
பின்னர் அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். பின் அரைத்த பச்சை மசாலாவை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

மசாலா வதங்கியதும், தயிர் அல்லது தேங்காய் பால் சேர்த்து, கொதிக்க விடாமல் கலக்கவும். சுவைக்கு உப்பு சேர்க்கவும்.
பின்னர் கீறி வைத்த முட்டைகளை சேர்த்து, கறிவேப்பிலை தூவி, மிதமான தீயில் 5-10 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஹரியாலி முட்டை குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |