கொய்யாபழத்தில் சட்னி வைக்கலாமா? இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையில் இதோ
கொய்யாபழத்தில் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றுதான் கொய்யா பழம் ஆகும். ஆப்பிளுக்கு சமமான சத்துக்கள் நிறைந்த கொய்யாபழம் மலிவான விலையில் கிடைக்கின்றது.
நார்ச்சத்து, வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு கொய்யாபழம் எடுத்துக்கொண்டால் உடம்பில் மிகப்பெரிய வித்தியாசத்தினை காண முடியும்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை நீக்குவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை, சர்க்கரை நோயாளிகள் இவற்றிற்கு மிகவும் சிறந்ததாக காணப்படுகின்றது.
ரத்த சோகை உள்ளவர்கள் சிவப்பு நிற கொய்யாவையும், சர்க்கரை நோய், மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வெள்ளை நிற கொய்யாவையும் எடுத்துக் கொள்ளலாம்.
தற்போது கொய்யாபழத்தில் சட்னி செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கொய்யா - 2
பூண்டு - 6
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்த மல்லி - சிறிதளவு
சாட் மசாலா - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அரைத்து வைத்துள்ள சட்னியை இதனுடன் சேர்த்து கிளறவும்.
புளிப்பு தேவைப்பட்டால் சிறிதளவு புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தாளித்த பின்பு அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |