ஆட்லெட் செய்யப்போறீங்களா? துவையல் முட்டை ஆட்லெட் செய்து பாருங்க
முட்டையை வைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியான ஆம்லெட் செய்றீங்களா? சற்று வித்தியாசமான முட்டை துவையல் ஆட்லெட் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக முட்டை என்றால் அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். அதிக புரோட்டின் கொண்ட முட்டையில் ஏகப்பட்ட சத்துக்களும் அடங்கியுள்ளது.
மேலும் முட்டையை அவித்து சாப்பிடுவது, குழம்பு செய்து சாப்பிடுவது, பொரித்தல், ஆம்லெட், கலக்கி என செய்து சாப்பிடுகின்றனர்.
ஒருமுறை எப்பொழுதும் போன்று ஆம்லெட் செய்யாமல் சற்று வித்தியாசமாக முட்டை துவையல் ஆம்லெட் செய்யலாம். எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
வரமிளகாய் - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி - 3 துண்டு
துருவிய தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை - 3 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - சிறிது
முட்டை - 1
நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பூண்டு, வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு அதில் சீரகம், புளி சேர்த்து வதக்கி, அதனுடன் தேங்காய், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து இறக்கவும்.
இதனை மிக்ஸி ஜாரில் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மென்மையாக அரைத்து அதனை கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளவும். பின்பு மற்றொரு பௌலை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அரைத்து வைத்த துவையல், முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.
பின்பு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் முட்டை கலவையை ஊற்றி மிதமான தீயில் முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால் சுவையான துவையல் ஆம்லெட் தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |