சுவையான பிரெட் முட்டை மசாலா செய்வது எப்படி? இதோ!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் முக்கியமானது முட்டை.
முட்டையில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடவும் பலரும் விரும்புவார்கள், அந்த வகையில் 10 நிமிடங்களில் சுவையான “பிரெட் முட்டை மசாலா” எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- பிரெட் - 3 துண்டுகள்
- முட்டை - 1
- பெரிய வெங்காயம் - 1
- மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1/4 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- பெருங்காயத் தூள் - சிட்டிகை
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - தேவையான அளவு

தயாரிப்பு முறை
முதலில் வெங்காயம், ப.மிளகாய் என்பவற்றை சிறுசிறு துண்டுகளாக பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பிரெட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
இதனையடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1 பெருங்காயத் தூள் - சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிது போன்ற பொருட்களை சேர்த்து தாளித்த கொள்ளுங்கள் பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
இதனை தொடர்ந்து முட்டை உதிரியாக வந்ததும் அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு டோஸ்ட் செய்துக் கொள்ளுங்கள். தற்போது பிரெட் முட்டை மசாலா தயார்.
