தக்காளியே இல்லாமல் சுவையான குழம்பு செய்ய தெரியுமா? இனி இந்த ரெசிபியில் செய்து பாருங்க
Tomato
Onion
Healthy Food Recipes
By Kirthiga
தற்போது தக்காளிக்கான விலை அதிகரித்து வரும் வேளையில், தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள்.
ஆகவே இந்த பதிவின் மூலம் தக்காளி இல்லாமல் எப்படி சுவையான ஒரு குழம்பு செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
கடுகு - 1 தே.கரண்டி
-
வெந்தயம் - 1/4 தே.கரண்டி
- பெருங்காயம் தூள் - சிறிதளவு
-
சின்ன வெங்காயம் - 1/2 கப்
-
பூண்டு - 1/4 கப்
- உப்பு
-
கருவேப்பிலை
-
குழம்பு மிளகாய் தூள்
-
புளி
- எண்ணெய்
மசாலா அரைப்பதற்கு
-
மிளகு - 01 தே.கரண்டி
-
துவரம்பருப்பு - 01 தே.கரண்டி
- உளுத்தப்பருப்பு - 01 தே.கரண்டி
-
மல்லி - 01 தே.கரண்டி
- சீரகம் - 01. தே.கரண்டி
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.
- பின் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- அதன் பின் மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் புளியை ஊற வைத்து, வதக்கி இருக்குணும் கலவையில் சேர்க்க வேண்டும்.
- குழம்பு கொதித்துக்கொண்டிருக்கும் வேளையில் உப்பு மற்றும் மசாலா சேர்த்து கலந்து எடுக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் மிளகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, மல்லி மற்றும் சீரகம் வறுத்தெடுத்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அரைத்ததை கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து எடுத்தால், சுவைாயன குழம்பு தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US