குழந்தைகளுக்கு பிடித்த பொடி இட்லி... இப்படி செய்து பாருங்க ருசி அள்ளுமாம்
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொடி இட்லி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலை மற்றும் இரவு நேரத்திற்கு சாப்பாடு என்றால் அது இட்லி, தோசையாகவே இருக்கும்.
அதிலும் குழந்தைகளுக்கு இவ்வாறான இட்லி, தோசையையே பல விதமாக செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவார்கள்.
அவ்வாறு இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பொடி இட்லி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை
வத்தல்
உளுந்தம் பருப்பு
கடலைப்பருப்பு
மிளகு
சீரகம்
உப்பு
பெருங்காயம்
தாளிப்பதற்கு..
இட்லி
கடுகு
கொத்தமல்லி இலை
நல்லெண்ணெய்
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை நன்றாக கழுவி, வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கறிவேப்பிலையை வறுத்து எடுக்கவும்.
பின்பு அதில் மிளகாய் வத்தல் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கி, அதில் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தொடர்ந்து கடலை பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்கவும். பின்பு இதனை நன்றாக ஆற வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்தால் சுவையான இட்லி பொடி தயார்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் ஏற்கனவே அவித்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து ஒருமுறை வதக்கி, பின்பு இரண்டு ஸ்பூன் இட்லி பொடியை சேர்த்து நன்றாக பிறட்டவும். இதில் நெய் சேர்க்க விரும்பினால் சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை சேர்த்து இறக்கவும். குழந்தைகளுக்கு பிடித்த சுவையான பொடி இட்லி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |