Chicken Paneer Cutlet: சிக்கன் பனீர் கட்லெட் இப்படி செய்து பாருங்க... வீட்டுல போட்டி போட்டு சாப்பிடுவாங்க
சிக்கன் பனீர் கட்லெட் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பனீர், சிக்கன் இவைகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.
எப்பொழுதும் போன்று பனீர் மற்றும் சிக்கனை சமைக்காமல் சற்று வித்தியாசமாக சமைக்கலாம். வித்தியாசமான முறையில் சிக்கன் பனீர் கட்லெட் எவ்வாறு செய்யலாம் என தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 4
பனீர் - 200 கிராம்
போன்லெஸ் சிக்கன் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி இலை - சிறிதளவு
சோள மாவு - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
இஞ்சி - ஒன்றரை டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எள் - 3 டீஸ்பூன்

செய்முறை
பாத்திரம் ஒன்றில் பனீரை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள், மிளகாய், தனியா தூளை சேர்க்கவும். கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
வேறொரு பாத்திரத்தில் சிக்கன், பொடியாக நறுக்கிய மிளகாய், வெங்காயம், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, சிறிது மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த சிக்கன் பேஸ்ட், நறுக்கிய கொத்தமல்லி இலை, சோள மாவு, எள் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
சலந்து வைத்துள்ள மசாலாவின் பனீர் துண்டுகளை போட்டு நன்றாக கலந்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்தால் கட்லெட் தயார்.
மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும். அவ்வாறு இல்லையெனில் உள்ளே வேகாமல் இருக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |