சிக்கனே இல்லாமல் சிக்கன் 65 எப்படி செய்றது? வெறும் 10 நிமிஷம் போதும்
அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் சிக்கன் 65 சிக்கன் இல்லாமல் மொறுமொறு என்று எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சிக்கன் ஆகும். சிக்கனை கிரேவி, குழம்பு இவ்வாறு செய்து சாப்பிடுவதை விட சிக்கன் 65 செய்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் வரை குட்டீஸ் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆனால் சிக்கன் இல்லாமல் மொறுமொறு என்ற சுவையில் சிக்கன் 65 எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை - 4
பெரிய வெங்காயம் - 1
மிளகு - 1 ஸ்பூன்
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
பட்டை - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 1 ஸ்பூன்
சோள மாவு - 1 ஸ்பூன்
சிக்கன் 65 பொடி - 3 ஸ்பூன்
வினிகர் - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை
முதலில் மிக்ஸி ஜாரில் அரை வெங்காயம், மிளகு, பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு, பட்டை இவற்றினை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு பெரிய பவுல் ஒன்றில் முட்டையை உடைத்து ஊற்றவும். இதனுடன் அரைத்து வைத்த விழுதில் ஒரு ஸ்பூன் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் கடாய் ஒன்றினை வைத்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இந்த கலவையை டிபன் பாக்ஸ் ஒன்றில் ஊற்றி, கொதிக்கும் நீரில் வைத்து மூடிவைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்த முட்டையை சிக்கனைப் போன்று பிய்த்து போட்டுக் கொள்ளவும். மற்றொரு புறம் அரைத்த கலவையில் இருக்கும் மீதத்துடன் சிக்கன் 65 பொடி, கடலை மாவு, சோள மாவு, வினிகர், சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக மீண்டும் அரைத்து எடுக்கவும்.
இப்போது அரைத்து வைத்துள்ள கலவையில் அவித்த முட்டையை சிறு சிறுதுண்டுகளாக சேர்த்து நன்றாக கலந்துவிட்ட பின்பு, எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சிக்கனே இல்லாத சிக்கன் 65 தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |