வீட்டுல சப்பாத்தி மீந்து போய்விட்டதா? சுலபமா நூடுல்ஸ் செய்திடலாம்
பெரும்பாலான உணவுப்பிரியர்களுக்கு பிடித்தமான உணவாக இருப்பது சப்பாத்தி ஆகும். அவ்வாறு சப்பாத்தி மீந்து போய்விட்டால் அதனை என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சில நேரங்களில் நாம் செய்யும் சப்பாத்தி மீந்து போய்விடும். சிலர் இதனை மீண்டும் கல்லில் போட்டு சூடு பண்ணி சாப்பிடுவார்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு இது பிடிக்காமல் இருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு மீந்து போன சப்பாத்தியை வைத்து அருமையான நூடுல்ஸ் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Image: south indian foods
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி
முட்டை-4
பெரிய வெங்காயம்-3
தக்காளி-3
இஞ்சி, பூண்டு- சிறிது
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போன்று வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து முட்டையை பொரித்து எடுக்கவும்.
பொரித்த முட்டையை தனியாக வைத்துவிட்டு, மீண்டும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு விடுது, தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
நன்கு வதக்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து குறைவான தீயில் மூடி வைக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், வெட்டி வைத்த சப்பாத்தி, முட்டைப் பொரியல் போட்டு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும். மீந்து போன சப்பாத்தியில் அருமையான நூடுல்ஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |