வீட்டுல முட்டைக்கோஸ் மட்டும் இருந்தால் போதும்... அட்டகாசமான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்
மாலை நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு அனைவருக்கும் பிடிக்கும். அந்த வகையில் முட்டைக்கோஸ் மட்டும் வைத்து போண்டா செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
கடலை மாவு - 1/2 கப்
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/4 டம்ளர்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை
முட்டைக்கோஸை துருவி எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் நீளவாக்கில் மெல்லியதாக நறு்க்கியுள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை சேர்க்கவும்.
இதனுடன் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும். மேலும் பெருங்காயத்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இதனுடன் இரண்டு ஸ்பூன் எண்ணெய்யைக் காய வைத்து ஊற்றி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி எண்ணெய்யில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் முட்டைக்கோஸ் போண்டா தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |