தொடர்ந்து 7 நாள் இந்த ஜூஸ் குடிங்க.. எடை குறையும்- பீட்ரூட் செய்யும் அற்புதம்
தற்போது இருக்கும் பாஸ்ட்புட் உலகில் உடல் எடையைக் குறைப்பதற்காக ஏகப்பட்ட உணவுகள் கண்டுபிடிக்கபட்டு வருகின்றன.
நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிப்பவர்கள் அதனை குறைப்பது என்பது சவாலான விடயமாக பார்க்கப்படுகின்றது. இன்னும் சிலர், எடை இழப்புக்கு உதவும் உணவுகளைத் தேடுகிறார்கள்.
அப்படியாயின் எடை இழப்புக்கு உதவும் உணவுகளில் பீட்ரூட் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
நிலத்தடியில் வளரும் இந்த கிழங்குகளில் கலோரிகளை எரிக்கும் ஆற்றல் உள்ளது. அத்துடன், பீட்ரூட் நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால் தினசரி உணவில் சேர்ப்பது சிறந்தது.
ஆய்வின்படி, பீட்ரூட் சாறு உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும். உங்கள் அன்றாட உணவில் பீட்ரூட்டை சேர்க்க உதவும் உணவு வகைகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பீட்ரூட் ஸ்மூத்தி
- ஒரு பீட்ரூட்டை சிறியதாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போடவும், அதனுடன் ஸ்ட்ராபெர்ரி, அரை வாழைப்பழம், அரை கப் கீரை மற்றும் ஒரு கப் பால், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- தேவை இருந்தால் பால் அல்லது நீர் சேர்த்து கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.
- காலை அல்லது இரவு வேளைகளில் குடிக்கலாம். இது உங்கள் பசியை கட்டுபடுத்தி எடை அதிகரிப்பை தடுக்கும்.
2.பீட்ரூட் சூப்
- ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூடானதும், 1 நறுக்கிய வெங்காயம் மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் தோல் நீக்கி நறுக்கிய பீட்ரூட் மற்றும் 1 அங்குல இஞ்சி சேர்த்து வதங்க விடவும்.
- பீட்ரூட் நன்றாக வதங்கிய பின்னர் அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து 20-25 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். கலவை காய்ந்ததும், அதை ஒரு மிக்ஸி ஜாடியில் போட்டு மென்மையாக அரைக்கவும்.
- அதனை தொடர்ந்து, அந்த கலவையில் கொஞ்சம், மிளகு தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
- பச்சை இலை காய்கறிகள் அல்லது வோக்கோசு இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கலந்தால் சுவையான பீட்ரூட் சூப் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |