Banana Flower Chutney: வாழைப்பூவில் சட்னியா? ஒரு முறை வைத்து சாப்பிட்டு பாருங்க...
சுவையான வாழைப்பூ சட்னி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வாழைப்பூவில் கூட்டு, பொரியல், வடை செய்து தான் நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால் வாழைப்பூவில் சட்னியும் செய்யலாம்.
ஆனால் வாழைப்பூ சட்னி எவ்வாறு செய்வது என்பது நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை. தற்போது அதனை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
புளி - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 1 பௌல்
தயிர் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 கப்
தாளிப்பதற்கு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வாழைப்பூவில் நடுவில் இருக்கும் வெள்ளை நிற தண்டை நீக்கிவிட்டு சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதிர் தயிர் சேர்த்து, அதனுள் வாழைப்பூவை பொடியாக நறுக்கி போடவும்.
நறுக்கிய வாழைப்பூவை அலசிய பின்பு வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் பூவை போட்டு, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், சீரகம், புளி மற்றும் 1 கப் நீரை ஊற்றி நன்கு வேக வைக்க வேண்டும்.
வாழைப்பூ நன்கு வெந்ததும், அதை இறக்கி குளிர வைத்து பின்பு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், வேகவைத்த வாழைப்பூ, சிறிது தண்ணீர் ஊற்ற நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின்பு அரைத்து வைத்திருந்த சட்னியையும் அதனுடன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வாழைப்பூ சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |